Followers

Saturday, 14 December 2013


நாம யோசிக்கிறது சரியா ?  


 நாம் அனைவரும் நமக்குப் பிடித்ததை நாள்தோறும் ரசித்துக்கொண்டு தான் இருக்கிறோம். நாம் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்றாலும் சரி நம் கவனத்தைக் கவரும் எதையானாலும் ரசித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

   ஆவி பறக்கும் காபிக் கோப்பை, சொட்டு சொட்டாய் ஒழுகும் மழைத்துளி, பிரம்மாண்டமாய் கட்டப்பட்டிருந்த வீடு, பளபளப்பாய் சத்தமில்லாமல் செல்லும் வெளிநாட்டு கார் (car), பக்கத்தில் இருப்பவர் வைத்திருக்கும் புதிதாய் வாங்கிய மொபைல் போன் என இன்னும் பலவற்றை ரசிக்கிறோம். 

   குழந்தையானாலும் சரி, நம் அப்பா அம்மாவானாலும் சரி, நிபந்தனையற்ற பாசம் தரும் தாத்தா பாட்டியானாலும் சரி, பிடித்ததை வாங்கித்தரும் சகோதரனானாலும் சரி அனைத்திலுமே அழகு இருப்பதை நாம் மறுப்பதில்லை. அவற்றை ரசிக்காமலும் இருப்பதில்லை.

   அப்படியிருந்தும் ஒரு ஆண் ஒரு பெண்ணை ரசிப்பதும், ஒரு பெண் ஒரு ஆணை ரசிப்பதும் இன்னமும் தவறாய் பார்க்கப்படுதல் எந்த வகையில் சரியென எனக்குப் புரியவே இல்லை.

   இனக்கவர்ச்சி இயற்கையானது. எதிர் பாலின ஈர்ப்பு தவறானதில்லை. " Admiring " என ஆங்கிலத்தில் அழகாய் சொல்லப்படும் ரசித்தல் செயல், எதிர் பாலினத்தை ரசிக்கும் போது மட்டும் " Sight அடித்தல் " என கொசைப்படுத்தப்படுதல் முறையல்ல.

  சிந்திக்கும் விதத்தை மாற்றுவோம்.  சமூகம் தன்னால் மாறிப்போகும் !

   சரியெனப்பட்டால் சொல்லுங்கள், தவறெனப்பட்டாலும் கூட !

iravu



உன் வெளிச்சப் புன்னகையில் தொலைந்து போனது என் இருள் சூழ்ந்த இரவுகள் !

அந்தக் காலக் கதையில் கரடி வந்தவுடன் நட்பைத் தெரிந்து கொண்டான் நண்பன்... இந்தக் கால நிஜத்தில் கல்யாணம் ஆனவுடன் நட்பைத் தெரிந்து கொள்கிறான் நண்பன் !