அழிவு !
நீரில்லாமல் உலகம் அழியத்தொடங்கியாகி விட்டது. ஆனால் இந்த கட்டுரை அது தொடர்பானதல்ல...
உங்கள் குழந்தைகளும், என் குழந்தைகளும் அழியத்தொடங்கிவிட்டன...
தன் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என நிம்மதியுடன் படிக்கத்தொடங்குபவர்களே... சற்றே நிதானித்து சிந்தியுங்கள். உங்கள் வளர்ந்த பிள்ளைகளுக்கு பிள்ளைகள் இருக்கும், அல்லது பிறக்கவிருக்கிறது...https://ramyantamil.blogspot.in/
" இன்றைய மாணவர்களின் போக்கு " தான் நம்மை பதைபதைக்க வைக்கும் இந்த கட்டுரையின் பேசு பொருள்.
பின்னோக்கி சிந்தித்துப் பாருங்கள்... நம் பள்ளிப் பருவ தொடக்கமானது இன்றும் நினைவில் குளிரூட்டக்கூடியது. https://ramyantamil.blogspot.in/
பல் முளைக்காத போதே நம் தாயின் மீது கொண்ட பிணைப்பைப் போலவும், நம்மை வானில் தூக்கியெறிந்து சத்தமாய் கொஞ்சிக்கொண்டே பிடித்து முத்தமிட்ட நம் தந்தையின் மீது கொண்ட பிணைப்பைப் போலவும் சில உறவுகளின் மீது அன்பு ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த குடும்ப உலகை விட்டு சிலர் சிரித்துக்கொண்டேயும், சிலர், இன்று நினைத்தால் சிரிப்பு வருமளவு அழுதுகொண்டேயும் பள்ளிப்பருவத்தினை தொடங்கியிருப்போம்.
https://ramyantamil.blogspot.in/
அன்று வரை அப்பாவாய் இருந்தவர், புது மிஸ் சொன்னவுடன் டாடியாகிப்போயிருப்பார். மிஸ் நமக்கு பிடித்த புடவை கட்டிவந்துவிட்டால் அன்று இனம் புரியாத சந்தோஷம். அதிலும் மற்றவர்களுடன் போட்டி போட்டு அந்த புடவையை தொட்டுவிட்டால் எதோ sports dayல் போட்டியிட்டு championship பெற்றுவிட்டதான சந்தோஷம்.
ஒரு வகுப்பு முடிந்து மற்ற வகுப்பு புது டீச்சரிடம் போகவேண்டியதெல்லாம் மீசை முளைக்கா வயதின் காதல் தோல்விகள் தான். அடுத்த அன்பு அந்த அடுத்தகட்ட தாயின் மீது தானாய் ஒட்டிக்கொள்ளும். https://ramyantamil.blogspot.in/
உலகமே அவர் சொல்லித்தந்தது தான். நல்லதை நோக்கிய நகர்வும், தவறுகளின் தொலைவின் அவசியமும் அந்த மிஸ்களும், சார்களும் நம் அம்மாவைப் போல கொஞ்சி, ஏமாற்றி, உள்ளே முழுக்க அன்பைச் சுமந்திருக்கும் தந்தையைப் போல மிரட்டி, அடித்து மனதில் பதியவிட்டதாய்த் தானிருக்கும். https://ramyantamil.blogspot.in/ அந்த நாம் தான் இன்று வளர்ந்து உயரே சிறகடித்துக்கொண்டிருக்கிறோம்.
தவறுதலாக அந்த டீச்சர் தவறாய் சொல்லிக்கொடுத்தது யார் சரியாய்ச் சொன்னாலும் இறுதிவரை ஏற்றுக்கொள்ளமுடியாததாய் இருந்ததும் அவர் மீதான நம் நம்பிக்கையும், பற்றுமே காரணங்கள்.
பறக்கும் மலை போன்ற மேகங்களை ஊடுருவி தென்படும் சூரிய ஒளியைப் போல கடக்க முடியாமல் ஐந்தாம் வகுப்பு முடித்து எல்லா https://ramyantamil.blogspot.in/ நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் விடைகொடுத்து ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருப்போம்.
எல்லாமே புதுசு, சில தாய்களும், பல தந்தைகளுமாய் நிறைந்திருக்கும் அந்த பள்ளி. கல்வியின் அவசியமும் அதற்கான கண்டிப்பின் அவசியமுணர்ந்த சார்கள் படிப்படியாய் நம்மை செதுக்கிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். கடுகடுவென நம் முன் மிரட்டி staff room சென்று 7G ரெயின்போ காலனியின் தந்தை போல நம்மை எப்படியாவது சரியாக வளர்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நமக்கு பரிச்சயப்படாததாகவே நாம் கடந்திருப்போம். https://ramyantamil.blogspot.in/ யாருக்கு நன்றாய் படிப்பு வரும், யாருக்கு நன்றாய் படிப்பு வருமென தந்தை, தாயைவிட அதிகமாய்த் தெரிந்தவர்கள் அவர்களாகவே இருந்திருப்பர். அவர்கள் காட்டிய வழியிலேயே இன்று நம்மில் பலர் நுனி நாக்கில் ஆங்கிலத்தோடு உலகில் பல்வேறு இடங்களில், பல்வேறு கம்பெனிகளில் இருப்பதில்லாமல், மருத்துவர்கள், பல கலை வல்லுனர்கள், அதிகாரிகளாகவும், அரசுப்பணிகளிலும் மிளிர்ந்துகொண்டிருக்கிறோம்.
https://ramyantamil.blogspot.in/ எப்போதுமே நமக்குத் தெரியாமலேயே நம் மீது ஒரு தன்னம்பிக்கையோ அல்லது ஒரு கர்வமோ இருந்துகொண்டேதான் இருக்கும். ஏனெனில் நாம் எவ்வளவோ பேரைவிட நிச்சயம் நல்ல நிலையில் இருந்துகொண்டிருப்போம், அல்லது அதற்குரிய திறமையுடன் நிச்சய வெற்றியை நோக்கிய பயணத்தில் இருந்துகொண்டிருப்போம். https://ramyantamil.blogspot.in/
ஆம். நிச்சயம் இது நம் திறமையாலேயே கிடைத்தது, துளியும் மறுப்பதற்கில்லை. நினைவுப் பரவலை ஒரெயொரு நிறுத்துங்கள். இது நம் திறமையால் மட்டுமே கிடைத்ததா? விரல் சூப்பிக்கொண்டு வீடு விட்டு வேறோர் உலகம் காண எத்தனித்த போது நாம் வெறும் மண் குவியல் தானே? ஆற்று மணல் இன்று கற்சிலையாக உறுதிகொண்டு நிற்பது மணலின் முயற்சி மட்டுமா? நன்றாய் யோசித்துப் பார்த்தால் மறுக்க முடியாமல் 'அட ஆமால்ல !' என நம் மனதில் தோன்றும். இன்றைய நாம், நம்மாலான இந்த சமூகம் என எல்லாமும், எல்லாமும் கற்சிலைகளாகவும், கல் மண்டபங்களாகவும் தென்பட்டாலும் அவர்களும் பல கட்டங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றனர் தானே?
எல்லோருடைய பெரும்பான்மையான குணநலன்களும் அந்த சார்களாலும், டீச்சர்களாலும் களையெடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவையே. https://ramyantamil.blogspot.in/
அப்படியெனில் எங்கிருந்து இந்த சமூகத்தின் தீய குணங்கள் தலைவிரித்துக்கொண்டன? விதிவிலக்குகளும், அவற்றை விதிக்குட்படுத்த அனுமதியளிக்காத உயர் அமைப்புகளுமே அவற்றின் காரணம்.
இன்றும் நம்மில் பலர் நம் சாரை பேருந்தில் பார்க்கிறோமானால் எழுந்து நின்று இடமளித்திவிட்டு எதோவொரு நினைவுக்கீற்றில் அவர் கேள்விகளுக்கு பதிலளளித்தபடி நின்றுகொண்டிருப்போம், அப்போது நமக்கு காலும் வலிக்காது.
அப்படியே இன்றைய பிள்ளைகளை யோசித்துப் பாருங்களேன். அடித்தால் பிள்ளை வெறுத்துவிடுவானென மிரட்டியாவது கண்டித்து அவனை நிலை தாழ்ந்துவிடாமல் https://ramyantamil.blogspot.in/ காத்துவிடவேண்டுமெனும் தந்தைகளை "எங்கப்பன் எப்பப்பாத்தாலும் திட்டினே இருக்காண்டா... ஒரு நாள் போட்றலாம்னு இருக்கேன் மச்சான்" எனும் பேச்சை நாம் கேட்க நேரிட்டால் ஆச்சர்யப்படுவோமா என்ன? இது மிகச் சாதாரணமான ஒன்றாகிவிட்டது...
இந்த நிலையில் அவனை கண்டிக்கவே கூடாதென சட்டமியற்றி, கண்டிப்பவர்களின் மீது கடும் நடவடிக்கையென எவ்வளவு விஷத்தை நாம் கலந்திருக்கிறோம் எனும் நிகழுண்மை என் பிளைகளின் மீதும், உங்கள் பிளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளின் மீதும் கவலையை மட்டுமே உண்டாக்குகிறது. இன்னும் ஒரு சில இடங்களில் மட்டும் "இவன் சொல்ற பேச்சையே கேக்க மாட்றான் சார், என்னன்னு கேளுங்க சார்" எனும் பேச்சுகள் கேட்கமுடிகின்றது. https://ramyantamil.blogspot.in/ அந்த ஒருசில பேச்சுகளும் வழக்கொழிந்து போகும். நாம் சொல்லி கேட்காத பிளைகள் அவன் சாருக்கும், டீச்சருக்குமாவது மரியாதையளித்தோ பயந்தோ கேட்டுத் திருந்துவான் எனும் நம் ஆசை நப்பாசையாகிப் போகத்தொடங்கி பல காலம் ஆகிவிட்டது. கட்டுக்கடங்காத இளம் பருவத்தில் கட்டுபாடின்றி என்னவாகுவானென நினைத்துப் பாருங்கள்.
பெற்ற தாயையையோ தந்தையயோ கொலை செய்வதும், தங்கையிடம் தரம் தாழ்ந்து நடப்பதும், வீடுகளில் சென்று கொள்ளையடிப்பதும், தெருவில் நடந்துசெல்லும் பெண்களின் செயின் பறிப்பதும், ஆசிரியரைத் தாக்குவதும், கொலை செய்வதும், சக மாணவனைத் தாக்குவதும், கொலை செய்வதும், புரியாத வயதில் காதலெனச் சொல்லி பெண்ணை மானபங்கப்படுத்துவதும், நேரடியாய்த் தெரிந்த முகங்கள் மொபைலில் தவறான படங்களில் எடுப்பதும், எடுக்கப்பட்டதில் இருப்பதும், கர்ப்பத்துடன் பள்ளிக்கு வரும் மாணவிகளும், ஆசிட் ஊற்றுவதும், பொது இடத்திலேயே தைரியமாய் கொலை செய்வதும், கல்லூரிக்கு அரிவாள் கத்திகளுடன் செல்வதும் அடிக்கடி செய்தித்தாட்களில் படித்தால் பதட்டமாகாதீர்கள்.
இனி அவை அதிகமாகப் போவதில் ஐயமிருந்தால் யாரிடமேனும் கலந்துரையாடி ஐயம் போக்கிகொள்ளுங்கள்.
கண்டிப்பில்லாத குழந்தைகளே நாளைய இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பற்றிக்கொண்டெரியும் தீ என் வீட்டை எரிக்காமலிருந்தால் சரியென ஆசுவாசப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
https://ramyantamil.blogspot.in/
தெருவே எரியும் போது என் வீடும் ஒரு நாள் எரியத் தானே செய்யும்? அது தவிர்க்கமுடியாதது தானே?
https://ramyantamil.blogspot.in/
தெருவே எரியும் போது என் வீடும் ஒரு நாள் எரியத் தானே செய்யும்? அது தவிர்க்கமுடியாதது தானே?
சமூகம் சீர்கட்டுக்கொண்டு தான் இருக்கிறது, இதெல்லாம் பார்த்து வளரும் என் பிள்ளையையோ, பேரப் பிள்ளையையோ அது பாதிக்காமல் இருந்துவிட முடியாது.
பிள்ளைகளைக் கண்டிக்க வேண்டியது பெற்றோர் மட்டுமல்ல, ஆசிரியர்களும் தான். என் மகனையே நான் எப்படி கண்டிப்பது? என தயங்கி நிற்கும் ஒவ்வொருவரின் பிள்ளையும் மெல்ல மெல்ல நாசமாய்ப் போவதைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியொன்றுமில்லை.
எதோ ஒரு இடத்தில் கத்தியால் குத்திவிட்டதைப் பெரிதாய் பேசிக்கொண்டிருக்கும் நாம், பிஞ்சுகளின் நெஞ்சுகளில் நஞ்சு கலந்திருப்பதையே இப்போது தான் உணர்கிறோமல்லவா? நாகரிமாய் பொது வெளியில் விவாதிக்கப்பட முடியாதளவு அநாகரீகம் பரவித்தான் கிடக்கிறது. https://ramyantamil.blogspot.in/ மருத்துவர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்குத் தெரிந்தும் ஏதேதோ காரணங்களால் வெளியில் சொல்ல முடியாத நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. ஏன்? உங்களுக்கே கூட அப்படிப்பட்ட நிகழ்வேதும் தெரியாதா என்ன? எதையுமே கடக்காமலா வந்துவிட்டீர்கள்? தெரியும், நன்றாய்த் தெரியும். ஆனாலும் வாய் திறக்க மாட்டோம்.
பெற்றோரோ, ஆசிரியரோ மாணவர்களையும், மாணவிகளையும் தன்னை தன் பெற்றோரும், ஆசிரியர்களும் வளர்த்த விதம் வளர்க்காமல் போனால்...
இதென்ன பிரமாதம்... இனி தான் இருக்கிறது கண்ணுறப் போகும் அழிவு.
ஒரு ஆசிரியர் மாணவரின் மனம், உடல் நோகும்படி நடக்கக்கூடாதென சட்டம் சொல்கிறது. https://ramyantamil.blogspot.in/
ஆசிரியர் ஒருவர் மாணவரை அடித்து விட்ட வழக்கில் ஆசிரியருக்கு தண்டனையை சட்டப்படி உறுதி செய்த பின் உச்ச நீதிமன்ற நீதிபதி "என்னை என் ஆசிரியர் தேவைபட்ட நேரங்களில் எல்லாம் கண்டித்தால் தான், இன்று நான் உச்சநீதிமன்ற நீதிபதியாய்த் திகழ்கிறேன், இன்று அவரை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்" என மனசாட்சிப்படி கருத்து தெரிவித்தார். https://ramyantamil.blogspot.in/
நாளைய சமுதாயம் நீதிபதிகளாய் ஆவதும், அதே நீதிமன்றத்தில் குற்றவாளிகளாய் ஆவதும் நம்மிடத்திலேயே உள்ளது.
நாளைய சமுதாயம் நீதிபதிகளாய் ஆவதும், அதே நீதிமன்றத்தில் குற்றவாளிகளாய் ஆவதும் நம்மிடத்திலேயே உள்ளது.
சட்டங்கள் மாற்றப்படலாம். மக்களின் தேவைக்குத் தானே சட்டங்கள். சிதைந்துவிடாது சமூகத்தைப் பாதுகாப்பதும் சட்டங்களின் கடமையே...
பெருமூச்சுடன் ஏற்கத்தான் வேண்டும்...
இது...
"அழிவு"
பி.கு:
இக்கட்டுரையில் ஏதேனும் தவறிருக்கலாம். மன்னிக்கப் பழகலாம். நல்லதோ கெட்டதோ நேரடியாய்த் தெரிவியுங்கள்.
இக்கட்டுரையில் எள்ளளவும் உண்மையிருப்பதாய் உங்கள் மனசாட்சிக்குப் பட்டால் whats app, Facebook, Twitter ல்
இக்கட்டுரையைப் பகிருங்கள். இதே பெயர் இமெயில் முகவரியுடன் பகிருங்கள்.
ரம்யன்,
A9791515695@gmail.com
