Followers

Thursday, 7 March 2019

பெண்கள் உயந்தவர்கள் இல்லை



          டித்தவுடன் கோபம் வர வேண்டுமே? வருகிறதா? ஆம். பெண்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் இல்லை.

          ஒரு ஆணைப் பொருத்தவரையில் அவனுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் அவன் தந்தையை விட அவன் தாயே உயர்ந்தவள். ஆனால் பொதுத்தளம் என வரும்போது அவனுக்கு பெண்ணை விட ஆணே உயர்ந்தவன். எங்கிருந்து தோன்றுகிறது இந்த முரண்? 



          சிறுவயதிலிருந்தே அவன் தன் தந்தைக்கு பணிவிடைகள் செய்வதற்காகவே தன் தாய் இருப்பதையே கண்டு https://ramyantamil.blogspot.com/ வளர்ந்துள்ள மனநிலையை அவன் அவ்வாறு வெளிப்படுத்துகிறான்.

          சரி, அவன் தான் அப்படி, ஆனால் அவன் தந்தைக்கு எங்கிருந்து வந்தது அந்த மனநிலை? அவனைப்போலவே அவன் தந்தைக்கும் அவரின் தந்தையிடமிருந்து வழிவழியாக அந்த மனநிலை கடத்தப்பட்டு வந்திருக்கிறது.

          பின்னோக்கி பார்த்தோமேயானால் அது ஆதிமனிதனிடமிருந்து தொடங்கிய ஒரு மனநிலையாகவே இருந்திருக்கிறது. ஆதிமனிதன் பெண்ணை என்ன அடிமையாகவா வைத்திருந்தான்? நேரடியாக அது அடிமைத்தனம் என கூறிவிட முடியாது.


          பின் எப்படித்தான் இந்த மனநிலை உருவானது?

          நம் அனைவருக்கும் தெரிந்தபடி ஆதிமனிதன் உடல் வலிமையால் தனக்குத் தேவையான உணவைத் 'தானே' தேடித் தின்றான். உடலளவில் பெண்ணை விட ஆண் அதிக பலம் பெற்றிருந்தமையால் அவனால் அப்போது வாழ்ந்த பெண்ணை விட அதிக உணவை விட முடிந்தது. அதனால் தன் https://ramyantamil.blogspot.com/ உணவிற்காகவும், விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் ஒரு ஆணைச் சார்ந்து இருப்பது அவர்களின் வாழ்வை எளிதாக்கியது.

          இவ்வாறான சார்புத்தன்மை வழிவழியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக ஜீன்களின் வழியே கடத்தப்பட்டு வந்திருக்கின்றது. இதன் நுட்பத்தை புரிந்து கொண்ட ஆண்கள் இது தொடர்பான புரிதலை பெண்களிடத்தில் ஏற்படுத்தாமல் இதை குடும்ப நிலையின் மதிப்புகளில் ஒன்றாகவே ஆக்கிவிட்டனர். பெண்களும் தம்மை அறியாமலேயே இதை குடும்ப நிலையின் மதிப்புகளில் ஒன்றாகவே நம்பவும் செய்துவிட்டனர். இதன் தொடர்ச்சியாகவே எப்போதும் ஆண்களுக்கு சேவை செய்யும் இடத்தில் https://ramyantamil.blogspot.com/ பெண்கள் தங்களை இருத்திக் கொள்கின்றனர். தங்களுக்குத் தேவையான உணவை யாரையும் சாராமல் தாங்களே தேடிக் கொள்ளும் நிலையில் தற்கால பெண்கள் இருந்தாலும் அவர்களிடம் இருந்து பெற்றுவந்த சேவை நிறுத்தப்படும்போது ஆண்களால் அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

          உடனே சில ஆண்கள் "நாங்கள் மட்டும் பெண்களுக்கு சேவை செய்வதில்லையா?" என கேள்வி எழுப்பக் கூடும். பிரச்சனையே இங்குதான் உள்ளது. 


          இருபலினங்களைச் சேர்ந்தவர்களும் உடலுழைப்பு ரீதியிலான பணிகளைத் தவிர https://ramyantamil.blogspot.com/ மற்ற பெரும்பாலான பணிகளில் சமநிலையில் பங்காற்றக் கூடியவர்கள் தான். அப்படி இருக்கும் போது இருவரும் இணைந்து வாழும் ஒரு சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் சேவை எனும் பெயரில் தனக்குக் கீழே இருக்க வேண்டும் எனும் எண்ணம் எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

          ஆண்கள் மட்டும் ஒன்றாக இருக்கும் இடமாக இருந்தாலும் சரி, பெண்கள் மட்டும் ஒன்றாக இருக்கும் இடமாக இருந்தாலும் சரி, திருநங்கைகள் மட்டும் ஒன்றாக இருக்கும் https://ramyantamil.blogspot.com/ இடமாக இருந்தாலும் சரி ஒரு மனிதனாக தன்னுடன் இருக்கும் மற்றொரு மனிதனுக்கு உதவிசெய்து வாழ்வது என்பது அவர்களின் வாழ்க்கையை எளிதானதாக மாற்றும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் வாழ்க்கை தானே உயர்ந்த மதிப்புகளைக் கொண்டதாக இருக்க முடியும்? 

          பெண்களைத் தற்சார்பு உள்ளவர்களாக மாற்றுவது கல்வியாக மட்டுமே இருக்க முடியும். கல்வி நிலையை அடைந்த பெண்கள் https://ramyantamil.blogspot.com/ தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தற்சார்புத் தன்மையும் கூடி வருகிறது. ஒரு சில இடங்களில் அது எல்லை மீறுவதாக இருந்தாலும் அதுவும் காலப்போக்கில் படிப்படியாக குறைந்து விடும் என்பதும் உண்மையே. 

          பெண்கள் பெற்ற கல்வியின் மூலம் அவர்களின் வாழ்வு நிலை உயர்ந்துள்ளதை பெரும்பாலான நகரங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. அவர்களின் இந்த உயர்வு அவர்களின் https://ramyantamil.blogspot.com/ பின்நாளைய குடும்ப வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு புறம் மட்டுமே இருந்து வந்த சேவை தற்போது இருபுறமும் இருந்து வரும் உதவியாக மாறியுள்ளது.

          பெண்கள் உயர்ந்தவர்கள் எனும் ஒளிவெள்ளத்தில் அவர்களை நிறுத்துவதாகக் காட்டி உண்மையில் அவர்களை இருளில் தள்ளும் நிலை இனி நிச்சயம் தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. https://ramyantamil.blogspot.com/ மிகச் சாதாரணமாக சமநிலையில் பார்க்கப்பட வேண்டிய ஒரு பாலினம் தான் பெண்களே தவிர அவர்கள் உங்களை காட்டிலும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை.


          பெண்களை மதிக்காத ஆண்கள் 'ஆண்' எனக் கொள்வதற்கு கருதுகோள்கள் இல்லை. அதே நிலை தான் பெண்களுக்கும்.

ஆண்களை மதிக்கும் பெண்களுக்கு பெண்கள் தின வாழ்த்துகள் !

https://ramyantamil.blogspot.com/