தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் தான் போல !
ஓடி வந்து கட்டியணைக்கும் மகளின் நெற்றியில்
முத்தமிடாமல் இருக்க முடிவதேயில்லை !
தவழ்ந்து வந்த மகள்
தடுக்கி விழுந்தவுடன்
கலங்கிப்போனது கண்ணும், மனசும் !
என்ன தான் உலகறிஞ்ச ஆளாயிட்டாலும்
பெத்த மனம் பித்து !
பிரசவத்தைப் பற்றி பேசும் இந்த சமூகம்
ஏனோ அறைக்கு வெளியே
அழுகையை விழுங்கி நிற்கும்
ஆணின் வலியை பேச மறந்து விடுகிறது !
பிரம்மன் செய்த பிழை தெரியுமா உனக்கு?
கண்களையும், நகங்களையும் மட்டும்
உனக்கு கூர்மையாக படைத்ததே !
அழுகைக்கு
அழுகாச்சி காட்டி வந்த எனக்கு
அழுகாச்சி காட்டிப் போன
அளவில்லா
அழகுக்காரி நீ !